அல்லு அர்ஜுன் வீட்டு வாடகை ரூ.16 லட்சமா? அவரது அப்பா கொடுத்த விளக்கம்
நடிகர் அல்லு அர்ஜுன் தற்போது அட்லீ இயக்கத்தில் ராக்கா என்ற படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தின் ஷூட்டிங் மும்பையில் தான் நடந்து வருகிறது.
ஹாலிவுட்டில் பயன்படுத்தும் பல தொழில்நுட்பங்களை எல்லாம் பயன்படுத்தி ஷூட்டிங் நடத்தப்பட்டு வருகிறதாம். ஷூட்டிங்கிற்காக அல்லு அர்ஜுன் மும்பையிலேயே குடும்பத்துடன் வீடு லீசுக்கு எடுத்து செட்டில் ஆகி இருக்கிறார்.

16 லட்சம் ரூபாய்
மும்பை ஜூஹூ பகுதியில் மாதம் 16 லட்சம் ரூபாய் செலுத்தி அந்த வீட்டில் இருந்து வருகிறார். கடற்கரை அருகில் 6000 சதுர அடி பரப்பளவில் அந்த வீடு இருக்கிறதாம்.
செய்தி வைரல் ஆன நிலையில் அல்லு அர்ஜுன் மும்பையிலேயே செட்டில் ஆகிவிட போகிறாரா என அவரது அப்பா அல்லு அரவிந்த்திடம் கேட்டபோது "மும்பையில் பட ஷூட்டிங் நடப்பதால் அப்படி தெரியும். அவருக்கு எப்போதும் ஹைதராபாத் தான் வீடு. அவரது குழந்தைகள் இங்கே படிக்கிறார்கள். இங்கே தான் அவருக்கு பிடித்த எல்லோரும் இருக்கிறார்கள். அதை விட்டு எப்படி மும்பையில் செட்டில் ஆவார்?' என கூறியுள்ளார்.