புஷ்பா பட நாயகன் அல்லு அர்ஜுன் சொத்து மதிப்பு மட்டுமே இத்தனை கோடியா?- இத்தனை கார்கள் வைத்துள்ளாரா?
நடிகர் அல்லு அர்ஜுன்
தெலுங்கு சினிமாவின் முன்னணி நாயகனாக இருப்பவர் அல்லு அர்ஜுன். 2 வயதிலேயே குழந்தை நட்சத்திரமாக விஜேதா என்கிற படத்தில் நடித்தார்.
2003ம் ஆண்டு வெளிவந்த கங்கோத்ரி படம் மூலம் ஹீரோவாக அறிமுகமாகி இப்போது புஷ்பா 2 படம் வரை கலக்கி வருகிறார்.
பின் ஆர்யா, Bunny என அடுத்தடுத்து அவர் நடித்த படங்கள் மிகப்பெரிய ஹிட் வரிசையில் அமைந்தன. புஷ்பா படம் மூலம் இந்திய சினிமா ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ள இவரின் புஷ்பா 2 பட போஸ்டர் நடிகரின் பிறந்தநாள் ஸ்பெஷலாக வெளியாகியுள்ளது.
சொத்து மதிப்பு
ரூ. 370 கோடிக்கு மேல் சொத்து மதிப்பு என கூறப்படும் அல்லு அர்ஜுன் ஒரு படத்ததிற்கு ரூ. 32 கோடி வாங்கிவந்த இவர் புஷ்பா படத்திற்கு பிறகு ரூ. 50 கோடியாக உயர்த்திவிட்டாராம்.
விளம்பரங்களில் நடிக்க ரூ. 3 கோடி வரை சம்பளம் பெறும் இவர் ஐதாராபாத்தில் சொந்தமாக நைட் கிளப் ஒன்றையும் நடத்தி அதன்மூலம் லட்சக்கணக்கில் வருவாய் கிடைத்து வருகிறதாம்.இவர் ரூ.1.2 கோடி மதிப்புள்ள ஜாகுவார் XJL, ரூ.86 லட்சம் மதிப்புள்ள ஆடி A7, ரூ.80 லட்சம் மதிப்புள்ள பி.எம்.டபிள்யூ X5 ஆகிய சொகுசு கார்கள் உள்ளன.
இதுதவிர தனக்கு தேவையான அதிநவீன வசதிகளுடன் கூடிய வேனிட்டி வேன் ஒன்றையும் சொந்தமாக வைத்துள்ளார் அல்லு அர்ஜுன். இந்த வேனின் மதிப்பு மட்டும் ரூ.7 கோடியாம். ஐதாபாத்தில் பிரம்மாண்ட பங்களா ஒன்று உள்ளது, அதன்மதிப்பு ரூ. 100 கோடி இருக்கும் என்கின்றனர்.