ரிலீஸிற்கு முன்பே அல்லு அர்ஜுனின் புஷ்பா படம் இத்தனை கோடி வசூலித்ததா?- வாய் பிளக்கும் ரசிகர்கள்
தமிழ் சினிமாவில் படங்கள் வெளியாகி வந்தாலும் மற்ற மொழி படங்களும் டப் செய்யப்பட்டு வெளியாகி வருகின்றன.
அப்படி வரும் 17ம் தேதி படு பிரம்மாண்டமாக வெளியாக இருக்கும் திரைப்படம் புஷ்பா. சுகுமார் இயக்கத்தில் தெலுங்கு சினிமாவின் மாஸ் நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தில் ரஷ்மிகா நாயகியாக நடித்துள்ளார்.
படத்தின் இசை தேவி ஸ்ரீ பிரசாத், படு பிரம்மாண்டமாக தயாராகியுள்ள இந்த திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளியாக இருக்கிறது.
வரும் வெள்ளிக்கிழமை வெளியாக இருக்கும் இந்த திரைப்படத்தின் தியேட்டர், சாட்டிலைட், டிஜிட்டல் மற்றும் ஆடியோ என மொத்தமாக சேர்த்து ரூ. 250 கோடி வசூலித்துள்ளதாம்.
ரிலீஸிற்கு முன்பே இத்தனை கோடி எந்த படமும் வசூலித்தது இல்லை என சினிமா வட்டாரங்களில் படம் குறித்து பிரம்மிப்பாக பேசுகின்றனர்.
இந்த புஷ்பா படத்தில் ஸ்பெஷலான ஒரு பாடலுக்கு நடிகை சமந்தா குத்தாட்டம் போட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.