அல்லு அர்ஜுனின் பாடல் சாதனையை பீஸ்ட் அடித்து நொறுக்கும் ! முக்கிய பிரபலத்தின் அப்டேட்..
தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள பிரமாண்ட திரைப்படம் பீஸ்ட்.
பெரியளவில் எதிர்பார்ப்பை ஏற்ப்படுத்தியுள்ள இப்படம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் எந்த மாற்றமும் நடக்காமல் இருக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
இதனிடையே இப்படத்தின் முதல் சிங்கள் வெளியாகும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு தற்போது வரை ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. அதற்கான எந்த ஒரு அப்டேட்டும் தற்போது வரை வெளியாகவில்லை.
இந்நிலையில் பீஸ்ட் படத்தில் நடன இயக்குனராக பணிபுரிந்துள்ளவர் ஜானி மாஸ்டர், இவர் தெலுங்கில் பணிபுரிந்த பாடல்கள் பல பெரிய ஹிட்டாகியுள்ளது.
குறிப்பாக அல்லு அர்ஜுனின் Buttabomma பாடலுக்கு இவர் தான் நடனமாய்த்திருந்தார். அந்த பாடல் உலகளவில் எந்தளவிற்கு சென்சேஷனல் ஹிட்டானது என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்.
மேலும் தற்போது அவர் கலந்து கொண்ட தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் Buttabomma பாடலை விட அடுத்து வரும் தளபதி விஜய்யின் பீஸ்ட் பாடல் பெரிய ஹிட்டாகும் என தெரிவித்துள்ளார்.
.@AlwaysJani Master hints about #Beast song 🤗
— Vijayism ™ (@VijayismTelugu) January 19, 2022
Expectations are high now 🔥@actorvijay pic.twitter.com/8A2a9w9Y1t