புஷ்பா 2-க்காக டபுள் மடங்கு சம்பளம் வாங்கிய அல்லு அர்ஜுன்.. அதுக்குன்னு இவ்வளவா?
அல்லு அர்ஜுன்
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் புஷ்பா திரைப்படம் கடந்த 2021 -ம் ஆண்டு வெளியானது. இதில் பாஹத் பாசில், சுனில், ராஷ்மிகா மந்தனா போன்ற பல பிரபலங்கள் நடித்திருந்தனர்.
இப்படத்திற்கு மக்கள் நல்ல விமர்சனம் கொடுத்ததால் ரூபாய். 400 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.
முதல் பாகத்தின் வெற்றியை தற்போது பிரமாண்டமாக இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. இப்படம் இந்த ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சம்பளம்
இந்நிலையில் புஷ்பா 2-க்காக அல்லு அருஜுன் வாங்கிய சம்பளம் குறித்து தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதில் அவர் ரூபாய் 85 கோடி சம்பளம் பெற்றுள்ளதாக சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது.
CWC- மணிமேகலையின் அம்மா மற்றும் தம்பியை பார்த்துளீர்களா? இதோ புகைப்படம்