முகத்தை காட்டு.. அல்லு அர்ஜுன் ஏர்போர்ட்டில் தடுத்து நிறுத்தம்! வைரலாகும் வீடியோ
நடிகர் அல்லு அர்ஜுன் மும்பை விமான நிலையத்திற்குள் செல்வதற்காக போனபோது அவரை பாதுகாப்பு அதிகாரி தடுத்து நிறுத்தி முகத்தை காட்டும்படி கூறி இருக்கிறார். அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி இருக்கிறது.
பொதுவாக நடிகர்கள் தங்களை மற்றவர்கள் பார்த்துவிடக்கூடாது என்பதற்காகவே மாஸ்க் போன்றவற்றை அணிந்துகொண்டு செல்வது வழக்கம்.
நிறுத்தப்பட்ட அல்லு அர்ஜுன்
அது போல அல்லு அர்ஜுன் முகத்திற்கு மாஸ்க், கண்ணாடி ஆகியவற்றை அணிந்துகொண்டு உள்ளே சென்றார். அவரை நிறுத்திய CISF வீரர், உங்க மாஸ்க்கை கழட்டுங்க என சொல்லி, அடையாளத்தை சரிபார்த்துவிட்டு அதன் பின் தான் உள்ளே விடுகிறார். ஆரம்பத்தில் வாக்குவாதம் செய்த அல்லு அர்ஜுன் அதன்பின் மாஸ்க்கை கழட்டுகிறார்.
அந்த வீடியோ வைரல் ஆன நிலையில் நெட்டிசன்கள் அதற்கு பல விதமாக ரியாக்ட் செய்து வருகின்றனர்.
அந்த பாதுகாப்பு வீரர் செய்தது சரிதான், ஸ்டார் என்றால் எல்லோரை விட மேலானவர்கள் கிடையாது என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
Please follow the rules 🙏
— Telugu360 (@Telugu360) August 10, 2025
Yesterday at Airport security , Allu Arjun was stopped by an officer and asked to show his face with Id. Allu was initially reluctant, and after a brief exchange of words, his assistant tried to convince the officer that he was Allu Arjun. Even then,… pic.twitter.com/sv0i6mf6EU

அமைதிப் பேச்சுவார்த்தையை முடக்கினால்... கடுமையான விளைவுகள்: எச்சரிக்கை விடுத்த ட்ரம்ப் News Lankasri
