சுமாரான ஓப்பனிங்.. ஆலியா பட்டின் 'ALPHA' திரைப்படம் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா..
ALPHA
பாலிவுட் திரையுலகை தாண்டி இந்திய அளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் ஆலியா பட். இவர் நடிப்பில் கடந்த 3-ஆம் தேதி வெளிவந்த திரைப்படம் தான் ALPHA. இப்படத்தில் அவருடன் இணைந்து நடிகை ஷ்ரவரி நடித்திருந்தார்.

யாஷ் ராஜ் பிலிம்ஸின் (YRF) ஸ்பை யுனிவர்ஸில் (Spy Universe) உருவான இப்படத்தை இயக்குநர் ஷிவ் ரவாயில் இயக்கியிருந்தார். பாபி தியோல், அணில் குமார், ஹ்ரித்திக் ரோஷன் என பல முன்னணி நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்.
சுமாரான ஓப்பனிங்
பிரம்மாண்ட பொருட்செலவில் ஆக்ஷன் கதைக்களத்தில் எடுக்கப்பட்ட இப்படம் ரசிகர்களிடையே பெரிதும் எதிர்பார்ப்பை உண்டாக்கியிருந்தது. ஆனால், ரசிகர்களின் எதிர்பார்ப்பை இப்படம் முழுமையாக பூர்த்தி செய்யவில்லை. இதனால் கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது.

இந்த நிலையில், ALPHA திரைப்படத்தின் 2 நாட்கள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் உலகளவில் 2 நாட்களில் ரூ. 38 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளது. இது இப்படத்திற்கு கிடைத்துள்ள சுமாரான ஓப்பனிங் என்பது குறிப்பிடத்தக்கது.