ALPHA திரை விமர்சனம்

By Sivaraj Jul 04, 2026 09:00 AM GMT
Report

ALPHA திரை விமர்சனம்

பாபி தியோல், ஆலியா பட், அனில் கபூர் ஆகியோர் நடிப்பில் ஸ்பை யூனிவெர்ஸ் படமாக வெளியாகியுள்ள ALPHA எப்படி இருக்கிறது என்று பார்ப்போம் வாங்க.

ALPHA திரை விமர்சனம் | Alpha Movie Review

கதைக்களம்

1999 கார்கில் போரில் இந்திய இராணுவ வீரர்கள் பலர் உயிரிழக்க விக்ராந்த் கௌல் (அனில் கபூர்), ஃபடே சிங் லகாவத் ஆகியோர் மட்டுமே எஞ்சியிருக்கின்றனர். இனி நம் வீரர்கள் யாரும் உயிரிழக்க கூடாது என்று Special Forces என்ற பிரிவை ஃபடே சிங் உருவாக்குகிறார்.

அதில் பயிற்சி பெறும் வீரர்களுக்கு என ஆல்பா சீரம் என்ற மருந்தை செலுத்துகிறார். அதன் வீரியத்தில் வீரர்கள் சிறப்பாக செயல்படுகின்றனர். குறிப்பாக காயங்களையும், உடல் பிரச்சனைகளையும் அந்த சீரம் விரைவில் சரி செய்யும்.

ALPHA திரை விமர்சனம் | Alpha Movie Review

இந்த சூழலில் கர்ப்பமாக இருக்கும் மனைவியையும், குழந்தையையும் காப்பாற்ற விக்ராந்த் யாருக்கும் தெரியாமல் ஆல்பா சீரமை பயன்படுத்துகிறார். அதன் விளைவாக அவரது மனைவி இறக்க, பிறந்த குழந்தையை ஃபடே சிங் தூக்கி செல்கிறார்.

குழந்தையை மீட்க வரும் விக்ராந்திடம் அது இறந்துவிட்டதாக பொய் சொல்லி வேறு குழந்தையின் உடலை ஃபடே சிங் கொடுக்கிறார்.

பின்னர் விக்ராந்திற்கு தெரியாமல் அவரது மகள் சீதாவை (ஆலியா பட்) ஆல்பா ஆராய்ச்சிக்கு பயன்படுத்தி, தனது காரியங்களை சாதித்துக் கொள்ளத் தொடங்குகிறார். ஆனால் சீதாவிற்கு தன்னைப் பற்றிய உண்மை தெரிய வர பழிவாங்க கிளம்புகிறார்.

அடுத்து என்ன ஆனது என்பதே மீதிக்கதை.

ALPHA திரை விமர்சனம் | Alpha Movie Review

படம் பற்றிய அலசல்

டைகர், பதான், வார் படங்களின் ஸ்பை யூனிவர்ஸில் ஆல்பா இணைந்துள்ளது. ஷிவ் ராவைல் இப்படத்தை இயக்கியுள்ளார். உதய் சோப்ராவின் கதைக்கு சௌமில் சுக்லா, ஸ்ரீதர் ராகவன் திரைக்கதை அமைத்துள்ளனர்.

ஆலியா பட்டை முன்னிறுத்தி ஆக்ஷ்னுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் வரும் சண்டைக்காட்சிகள் மிரள வைக்கின்றன. ஹிருத்திக் ரோஷனின் அறிமுகம் மற்றும் அவரது சண்டைக்காட்சி பொறி பறக்கிறது.

ALPHA திரை விமர்சனம் | Alpha Movie Review

அனில் கபூர் தனக்கே உரிய பாணியில் மாஸ் காட்ட, பாபி தியோல் ஒவ்வொரு காட்சியிலும் வில்லத்தனத்தில் மிரட்டுகிறார். இதுபோன்ற பிளஸ் பாயிண்ட்ஸ் இருந்தாலும், காட்சிகள் பெரும்பாலும் பார்த்து பழகியவை என்பதால் எதிலும் சுவாரஸ்யம் இல்லை.

அதனாலேயே ஏதோ நடக்கிறது என்பதுபோல் பார்க்க வேண்டியதாக உள்ளது. தன் உண்மையான அப்பா இவர்தான் என்று தெரிந்த பின்னும் ஆலியா அவருடன் சண்டையிட்டுவிட்டு, பின் தெரிந்துதான் சண்டையிட்டேன் என்று கூறுவதெல்லாம் செம கடுப்பு மொமெண்ட். சகோதரிகளுக்குள் நெருக்கம் ஏற்படுவதை காட்ட ஒரு பாடல்; அதில் மிக குறைந்த ஆடையில் அவர்களை காட்டியது எல்லாம் தேவையில்லாத ஒன்று.

வழக்கமான கிளைமேக்சில் ஒரு லீட் கொடுத்துதான் படத்தை முடிக்கிறார்கள். அதுவும் நமக்கு பெரிதாக ஒட்டவில்லை. டெக்னிக்கலாக படம் வலுவாக உள்ளது. பின்னணி இசையும், சண்டைக்காட்சிகளும் படத்தை பார்க்க வைக்கின்றன.

ALPHA திரை விமர்சனம் | Alpha Movie Review

க்ளாப்ஸ்

பாபி தியோல், அனில் கபூர், ஆலியா பட், ஷர்வாரி ஹ்ரித்திக் கேமியோ சண்டைக்காட்சிகள் பின்னணி இசை

பல்ப்ஸ்

பார்த்து பழகிய காட்சிகள் சுவாரஸ்யம் இல்லாத திரைக்கதை

மொத்தத்தில் இந்த ஆல்பா ஸ்பை யூனிவர்ஸிற்கு ஒரு த்ரிஷ்டி. ஆக்சன் பட விரும்பிகள் ஒருமுறை பார்க்கலாம்.

ரேட்டிங்: 2.5/5 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US