ரஜினியை நான் இயக்கினால் 1000 கோடி வசூல் வரும்: பிரபல இயக்குனர் அதிரடி
சூப்பர்ஸ்டார் ரஜினியை இயக்குவதற்காக பல முன்னணி இயக்குனர்கள் வரிசையில் காத்திருக்கிறார்கள். ஆனால் அண்ணாத்த படத்திற்கு பிறகு அவர் எந்த புது படத்தையும் அறிவிக்காமல் இருக்கிறார்.
இந்நிலையில் ப்ரேமம் பட புகழ் இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன் தான் ரஜினியை இயக்கினால் வசூல் 1000 கோடி வரும் என தெரிவித்து உள்ளார். ப்ரேமம் படம் வெளியான நேரத்தில் அவர் பற்றி ஒரு வதந்தி பரவியது. ரஜினி படத்தை இயக்க விருப்பம் இல்லை என அவர் சொன்னதாக கூறப்பட்டது. ஆனால் அவர் அப்படி எதுவுமே சொல்லவில்லை.
ரஜினியின் மகளே அல்போன்சிடம் போன் செய்து இது பற்றி விசாரித்து இருக்கிறார். நான் அப்படி சொல்லவே இல்லை என அல்போன்ஸ் தெரிவித்து உள்ளார்.
இந்த வதந்தி பரவி ஆறு வருடங்கள் கழித்தும் அது தன்னை பின்தொடர்ந்து வருகிறது என்றும், எனக்கு மட்டும் ரஜினியை இயக்க வாய்ப்பு கிடைத்தால் அது 1000 கோடிக்கும் மேல் வசூலிக்கும் என அல்போன்ஸ் புத்ரன் கூறி உள்ளார்.

இஸ்ரேல்- ஈரான் போருக்கு மத்தியில் பெரிய முடிவை எடுக்கும் வட கொரியா.., உலகிற்கு ஒரு எச்சரிக்கை News Lankasri

Numerology: இந்த தேதிகளில் பிறந்தவங்க லட்சுமி தேவியின் அருள் கொண்டவர்களாம்.. பணம் இனி கொட்டும் Manithan
