ரஜினி சார்.. நீங்க ஏபிசிடி சொன்னா கூட போதும்! பிரபல இயக்குனர் வைத்த கோரிக்கை
ரஜினிகாந்த்
நடிகர் ரஜினிகாந்த் சினிமாவில் இன்னும் உச்சத்தில் தான் இருந்து கொண்டிருக்கிறார். 72 வயதிலும் அவர் பிசியாக படங்கள் நடித்து வருகிறார்.
இன்று தமிழக முதலமைச்சர் ஸ்டாலினின் பிறந்தநாள் என்பதால் அவருக்கு வாழ்த்து சொல்லி ரஜினிகாந்த் வீடியோ வெளியிட்டு இருந்தார். அது இணையத்தில் வைரல் ஆனது.

அல்போன்ஸ் புத்ரன் கோரிக்கை
இந்நிலையில் ப்ரேமம் பட புகழ் இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன் ரஜினிக்கு ஒரு கோரிக்கை வைத்து இருக்கிறார்.
"ரஜினி சார் வீடியோ கேட்டு goosebumbs வந்தது. இன்று வீடியோ வெளியிட்டது போல அடிக்கடி உங்கள் மனதில் தோன்றுவதை வீடியோவாக வெளியிடுங்கள்.
'நீங்கள் ABCD சொன்னால் கூட அதை கேட்க ரசிகர்கள் இருக்கிறார்கள்' என அல்போன்ஸ் புத்ரன் கூறி இருக்கிறார்.
Also Read: இதற்காக தான் CWC-ஐ விட்டு விலகினாரா மணிமேகலை! என்ன செய்திருக்கிறார் பாருங்க