விஜய் CM-ஆ நடிச்ச படத்தின் டைட்டில் இதுதான்.. பிரபல இயக்குனர் வெளிப்படையாக கூறிய தகவல்
தளபதி விஜய்
தளபதி விஜய் தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோ. இவர் நடிப்பில் வெளிவந்த பல திரைப்படம் பாக்ஸ் ஆபிசில் மாபெரும் வெற்றியடைந்துள்ளது.
அப்படி விஜய் நடிப்பில் வெளிவந்து ரூ. 250 கோடிக்கும் மேல் வசூல் செய்து பாக்ஸ் ஆபிசில் மாபெரும் சாதனை படைத்த திரைப்படம் மெர்சல்.

இப்படம் அட்லீ - விஜய் கூட்டணியில் உருவாகி வெளிவந்த இரண்டாவது திரைப்படமாகும். இந்நிலையில், இப்படத்திற்காக இயக்குனர் அட்லீ பிரபல தொலைக்காட்சி நடத்திய விருது விழாவில் கலந்துகொண்டார்.
அப்போது அட்லீயிடம் விஜய் CM-ஆ நடிச்ச படத்தின் டைட்டில் என்னவாக இருக்கும் என்று கேள்வி கேட்டனர்.
இயக்குனர் அட்லீயின் பதில்

இதற்கு பதிலளித்த இயக்குனர் அட்லீ, 'விஜய் CM-ஆ நடிச்ச அந்த படத்திற்கு ஆளப்போறான் தமிழன்' என்று டைட்டில் இருக்கும் என பதிலளித்துள்ளார்.
இது சில வருடங்களுக்கு முன் நடந்த நிகழ்வாக இருந்தாலும், அந்த வீடியோவை ரசிகர்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக்கி வருகிறார்கள்.
அந்த வீடியோவை காண இங்கு க்ளிக் செய்யவும்
கங்கையில் 12 மணி நேரம் மிதந்த சிறுவன்! உயிர் பிரிவதை வேடிக்கை பார்த்த பெற்றோர்... நடந்தது என்ன? Manithan