வெந்து தணிந்தது காடு படத்தின் இரண்டாவது கிளைமாக்ஸ், வலியுறுத்திய நடிகர் சிம்பு!
வெந்து தணிந்தது காடு
நடிகர் சிம்பு நடிப்பில் இயக்குநர் கவுதம் மேனன் இயக்கத்தில் பெரிய எதிர்பார்ப்பிற்கு இடையே பிரம்மாண்டமாக வெளியாகியுள்ள திரைப்படம் வெந்து தணிந்தது காடு.
பிளாக் பஸ்டர் திரைப்படங்களின் கூட்டணியான இவர்கள் மீண்டும் மூன்றாவது முறையாக இணைந்துள்ளதால் இப்படத்தை அரம்பத்தில் இருந்ததே ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து வந்தனர்.
அதன்படி இப்படம் இன்று வெளியானது முதல் அனைவரும் சிறந்த விமர்சனங்களை பெற்று நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க வேண்டும் என நினைத்த கவுதம் மேனன் இது குறித்து சிம்புவிடம் தெரிவித்து இருக்கிறாராம்.
அதற்கு முதலில் யோசித்த சிம்பு, இரண்டாம் பாகம் குறித்த காட்சிகள் மட்டுமின்றி முதல் பாகத்தை முடிக்கும் வகையில் இரண்டாம் கிளைமாக்ஸையும் எடுக்கும்படி கேட்டு கொண்டாராம் சிம்பு.

வெந்து தணிந்தது காடு முதல் விமர்சனம் இதோ