தனக்கு பிறக்க போகும் குழந்தையின் பெயரை இப்போதே அறிவித்த ஆல்யா மானசா!
சின்னத்திரையில் மிகவும் பிரபலமான நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை ஆல்யா மானசா.
இவர் தன்னுடன் நடித்த சஞ்சீவ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார், அவர்களுக்கு ஐலா என்ற பெண் குழந்தையும் உள்ளார்.
இந்நிலையில் திருமணத்திற்கு பிறகும் ராஜா ராணி 2 சீரியலில் கதாநாயகியாக நடித்து வருகிறார் ஆல்யா மானசா.
மேலும் சமீபத்தில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்து வந்த ஆல்யாவிடம் சீரியலில் நடிப்பதை நிறுத்தப்போகிறாரா ஆல்யா மானசா என ரசிகர் ஒருவர் கேட்டுள்ளார்.
அதற்கு ஆல்யா "நான் எந்த சீரியலில் இருந்து விலகவில்லை. சந்தியா என்பது ஒருவரே, அது நான் தான்" என கூறியிருந்தார்.
இதனிடையே கர்ப்பமாக உள்ள ஆல்யா இப்போதே தனக்கு பிறக்கபோகும் குழந்தையின் பெயரை கூறியுள்ளார். அதன்படி ஆண் குழந்தை என்றால் அர்ஷ், பெண் குழந்தை என்றால் லைலா என தெரிவித்துள்ளார்.