7வது மாதத்தை நலங்கு வைத்து கொண்டாடிய சீரியல் நடிகை ஆல்யா மானசா- அழகிய வீடியோ
நடிகை ஆல்யா மானசா தமிழ் சினிமாவில் முதலில் நடன கலைஞராக அறிமுகமானார். பின் விஜய்யில் ராஜா ராணி என்ற தொடரில் நாயகியாக நடிக்க தொடங்கினார்.
அந்த சீரியல் அவருக்கு மக்களிடம் பெரிய அளவில் ரீச் கொடுத்தது, அதில் தன்னுடன் நாயகனாக நடித்த சஞ்சீவ் என்பவரையே காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
இவர்களுக்கு ஐலா என்ற அழகிய பெண் குழந்தை உள்ளது, இந்த நேரத்தில் தான் நடிகை ஆல்யா இரண்டாவது முறையாக கர்ப்பமாகியுள்ளார். அப்படியும் சீரியலில் தொடர்ந்து நடித்து வருகிறார், குழந்தை பிறக்கும் வரை நடித்துவிட்டு பின்பும் சில இடைவேளை எடுத்துக்கொண்டு நடிக்க வருவாராம்.
இந்த நேரத்தில் தான் அவருக்கு 7ம் மாத கொண்டாட்டம் நடந்துள்ளது. வீட்டிலேயே மிகவும் சிம்பிளாக அவருக்கு நலங்கு வைக்கப்பட்டு கொண்டாடப்பட்டுள்ளது.
அந்த வீடியோ இப்போது சமூக வலைதளங்களில் வலம் வருகிறது, இதோ பாருங்கள்,