யூடியூபில் ட்ரெண்டிங் NO.1-ல் ஆல்யா மானசா! ரசிகர்களை பெரியளவில் கவர்ந்த வீடியோ
சின்னத்திரையில் மிகவும் பிரபலமான நட்சத்திரமாக விளங்குபவர் நடிகை ஆல்யா மானசா, இவர் ராஜா ராணி என்ற தொடரின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானார்.
மேலும் அதே தொடரில் அவருக்கு ஜோடியாக நடித்த சஞ்சீவ் என்பவரை திருமணம் செய்து கொண்டார் ஆல்யா மானசா, தற்போது இவர் ராஜா ராணி சீசன் 2 சீரியலில் நடித்து வருகிறார்.
அந்த சீரியலும் ரசிகர்களிடையே பிரபலமாகியுள்ளதால் ஆல்யா மானசா அதில் பிஸியாக நடித்து வருகிறார், மேலும் தற்போது தனியாக யூடியூப் சேனல் ஒன்றையும் தொடங்கி வீடியோவை பதிவிட்டு வருகிறார்.
அந்த வகையில் ஆல்யா மானசா அவரின் குழந்தைக்கு மொட்டை அடித்துள்ளது குறித்து யூடியூப் சேனலில் வீடியோவை பதிவிட்டுள்ளார்.
மேலும் தற்போது இந்த வீடியோ ரசிகர்களை பெரியளவில் கவர்ந்துள்ளதால் யூடியூபில் ட்ரெண்டிங் NO.1-ல் உள்ளது, இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் ஆல்யா.