ஆல்யா மானசா ரசிகர்களுக்கு ஷாக்! ராஜா ராணி 2 புது சந்தியா இன்ஸ்டாவில் சொன்ன அதிர்ச்சி விஷயம்
விஜய் டிவியின் ராஜா ராணி 2 தொடரில் ஹீரோயினாக நடித்து வந்த ஆல்யா மானசாவுக்கு பதில் தற்போது ரியா என்ற புது நடிகை நடிக்க தொடங்கி இருக்கிறார்.
ஆல்யா பிரசவம்
ஆல்யா மானசா தற்போது கர்ப்பமாக இருக்கும் நிலையில் தான் ராஜா ராணி 2 தொடரில் இருந்து வெளியேறினார். அவர் விஜய் டிவியின் ராஜா ராணி முதல் சீசன் மூலமாக தான் நடிக்க தொடங்கினார். அதே சீரியல் ஹீரோ சஞ்சீவை காதலித்து திருமணம் செய்துகொண்டார் அவர்.
அவர்களுக்கு ஐலா என்ற மகள் உள்ள நிலையில் தற்போது இரண்டாவது குழந்தையை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்த மாத இறுதியில் தேதி கொடுத்திருக்கிறார்கள் எனவும் வளைகாப்பு விரைவில் நடக்க இருக்கிறது என தெரிவித்து இருக்கின்றனர்.
ராஜா ராணி 2 புது சந்தியா கொடுத்த ஷாக்
ஆல்யா வெளியேறியதால் தற்போது புது சந்தியாவாக ரியா என்ற நடிகை நடிக்க தொடங்கி இருக்கிறார். அவர் தற்காலிகமாக தான் அந்த ரோலில் நடிக்கிறார், ஆல்யா மீண்டும் பிரசவத்திற்கு பின் நடிப்பார் என தகவல் கூறப்பட்டு வந்தது. அதனால் ஆல்யா ரசிகர்கள் கொஞ்சம் நிம்மதியாக இருந்தனர்.
இந்நிலையில் தற்போது அவர்களுக்கு ஷாக் கொடுக்கும் விதத்தில் ரியா போட்டிருக்கும் ஒரு கமெண்ட் அமைந்திருக்கிறது. தான் permanent ஆக சந்தியா ரோலில் நடிக்கப்போவதாக கூறி இருக்கிறார் அவர்.