என்னை தத்தெடுத்தீங்களா? வெள்ளையாக இருக்கும் சாய் பல்லவி பெற்றோர் உடன் போட்ட சண்டை
நடிகை சாய் பல்லவி பிரேமம் படத்தில் மலர் டீச்சராக நடித்து ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களையும் திரும்பி பார்க்க வைத்தவர். அவருக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டமும் அந்த படத்தின் மூலம் கிடைத்தது.
அதற்க்கு பிறகு தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் அவர் நடித்து வருகிறார். அவரது டான்ஸ் திறமைக்காகவே பல பாடல்கள் பெரிய ஹிட் ஆகின்றன.
சினிமாவில் இந்த அளவுக்கு கலக்கி வரும் சாய் பல்லவி நிஜத்தில் டாக்டர் படிப்பை முடித்திருப்பவர்.
என்னை தத்தெடுத்தீங்களா
சாய் பல்லவி பார்க்க வெள்ளையாக இருக்கிறார், ஆனால் அவரது அப்பா மற்றும் அம்மா இருவருமே டஸ்கி என்பதால் ஒரு சந்தேகம் வந்ததாம்.
என்னை தத்தெடுத்தீங்களா என அவர் பெற்றோரிடம் சென்று சண்டை போட்டாராம். பார்க்கவும் உங்களை போல நான் இல்லையே என்றும் சாய் பல்லவி கேட்பாராம்.
'நீயும் உன் தங்கையும் ஒரே மாதிரி தானே இருக்கீங்க' என சொல்லி அவரது பெற்றோர் சாய் பல்லவியை சமாளிப்பார்களாம். இந்த விஷயத்தை சாய் பல்லவி சமீபத்திய பேட்டியில் கூறி இருக்கிறார்.