திரிஷாவை தொடர்ந்து அமலா பாலுக்கு கிடைத்த கௌரவம்! குவியும் பாராட்டு
நடிகை அமலா பால் தற்போது பல படங்களை கைவசம் வைத்திருக்கிறார். அவர் கேடவர் என்ற படத்தையும் சொந்தமாக தயாரித்து வருகிறார்.
இந்நிலையில் தற்போது அவருக்கு UAE அரசு கோல்டன் விசா கொடுத்து கௌரவப்படுத்தி இருக்கிறது. ஏற்கனவே சில தினங்களுக்கு முன்பு தான் நடிகர் பார்த்திபன் அதை பெற்று இருந்தார். தமிழில் அந்த பெருமையை பெற்ற முதல் நடிகர் பார்த்திபன் தான்.
கடந்த மாதம் திரிஷாவுக்கு கோல்டன் விசா வழங்கப்பட்டு இருந்தது. தற்போது அமலா பால் அதை பெற்று இருக்கிறார். ஏற்கனவே பல முன்னணி பாலிவுட் நடிகர்கள் மற்றும் மலையாள நடிகர்களுக்கு கோல்டன் விசா வழங்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
கோல்டன் விசா பற்றி அமலா பால் பேசி இருப்பதாவது..
"இது எனக்கு கிடைத்த பெரிய கௌரவம். நான் துபாயின் ஒரு அங்கமாக உணர்கிறேன். இது எனக்கு எப்போதும் பிடித்த ஒரு இடம். துபாய் அரசு அதிகாரிகளுக்கு நன்றி" என தெரிவித்து உள்ளார்.