கோவில் குளத்தில் குளித்த அமலா பால்.. வைரல் புகைப்படங்கள்
நடிகை அமலா பால் விவாகரத்துக்கு பிறகு ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வருகிறார். ஆடை படம் அதிகம் பேசப்பட்ட நிலையில் அதற்கடுத்து வாய்ப்புகள் கிடைக்காததால் அவர் சொந்தமாக கேடவர் என்ற படத்தை தயாரித்து நடித்தார்.
அந்த படம் ரிலீஸில் சிக்கல் வந்ததால் ஓடிடியில் நேரடியாக ரிலீஸ் செய்தார். மேலும் அவர் சில மாதங்கள் முன்பு முன்னாள் காதலர் ஒருவர் பாலியல் ரீதியாக அத்துமீறுவதாக போலீஸில் புகார் கொடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆன்மீகம்
இந்நிலையில் அமலா பால் சமீப காலமாக ஆன்மீகத்தில் அதிகம் ஈடுபாடு காட்டி வருகிறார். அதனால் அவர் இனி தொடர்ந்து நடிப்பாரா இல்லையா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது அமலா பால் இந்தோனேசியாவில் இருக்கும் Pura Gunung Kawi Sebatu என்ற கோவிலின் குளத்தில் குளிக்கும் புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.
அந்த போட்டோக்கள் வைரல் ஆகி வருகிறது.



