தனுஷ் உடன் மோதும் அமலா பால்! ஜெயிக்க போவது யார்
நடிகர் தனுஷ் நடிப்பில் மற்றும் இயக்கத்தில் ராயன் படம் வரும் ஜூலை 26ம் தேதி ரிலீஸ் ஆகிறது. சமீபத்தில் ரிலீஸ் ஆன இந்த படத்தின் ட்ரைலருக்கு நல்ல வரவேற்பு கிடைத்து இருக்கிறது.
மேலும் படத்தின் மீதும் ரசிகர்களுக்கு பெரிய எதிர்பார்ப்பு எழுந்து இருக்கிறது. சமீபத்தில் ஆர்ம்ஸ்ட்ராங் என்பவரது கொலை தமிழ்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அதே போன்ற பகை - கொலை கதைக்களத்தில் ராயன் படம் எடுக்கப்பட்டு இருக்கிறது.
இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என அனைவரும் எதிர்பார்த்து இருக்கின்றனர்.
போட்டிக்கு வரும் அமலா பால்
ராயன் படம் ரிலீஸ் ஆகும் அதே தேதியில் அமலா பால் நடித்து இருக்கும் லெவல் கிராஸ் என்ற படம் ரிலீஸ் ஆக இருக்கிறது.
இதற்கு முன் விஐபி படத்தில் தனுஷ் - அமலா பால் ஜோடியாக நடித்தனர். தற்போது அவர்களை பாக்ஸ் ஆபிசில் மோதும் நிலை வந்திருக்கிறது என நெட்டிசன்கள் பேசி வருகின்றனர்.


பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவுக்குள் அனுமதி? எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை News Lankasri
