10 நாட்களில் தமிழ்நாட்டில் அமரன் செய்த வசூல்.. எவ்வளவு தெரியுமா
அமரன்
தீபாவளிக்கு வெளிவந்த திரைப்படங்களில் மாபெரும் அளவில் வெற்றியடைந்த படம் அமரன். எதிர்பார்த்ததை விட ஒவ்வொரு நாளும் வசூலில் புதிய உச்சத்தை இப்படம் தொட்டு வருகிறது.
இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவான இப்படத்தை கமல் ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரித்திருந்தது.
சிவகார்த்திகேயன், சாய் பல்லவியுடன் இணைந்து புவன், ராகுல் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படத்தில் இதுவரை சிவகார்த்திகேயன் நடித்த எந்த திரைப்படத்திற்கும் கிடைக்காத வரவேற்பு அமரனுக்கு கிடைத்துள்ளது.
தமிழக வசூல்
இந்த நிலையில், அமரன் படம் 10 நாட்களில் தமிழ்நாடு பாக்ஸ் ஆபிசில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, இதுவரை அமரன் படம் தமிழகத்தில் மட்டுமே ரூ. 102 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இதன்மூலம் ரூ. 50 கோடி ஷேர் கிடைக்கும் என கூறப்படுகிறது. உலகளவில் 10 நாட்களில் ரூ. 210 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கண்துடைப்புக்காக ஆணையம் அமைத்து வரிப்பணத்தை வீணாக்கும் ஸ்டாலின் - அண்ணாமலை குற்றச்சாட்டு IBC Tamilnadu

கனடாவில் வாழ்வாதாரத்திற்காக டாக்சி ஓட்டும் இராணுவ வைத்தியர் - இந்திய பெண் பகிர்ந்த அனுபவம் News Lankasri
