கங்குவா ரிலீஸுக்கு பின்பும் தொடரும் அமரன் வசூல் வேட்டை.. இதுவரை எவ்வளவு தெரியுமா
அமரன்
தீபாவளிக்கு வெளிவந்து தற்போது வரை திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் அமரன்.
இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், சிவகார்த்திகேயன் - சாய் பல்லவி இணைந்து நடித்து வெளிவந்த இப்படத்தை கமலின் ராஜ்கமல் நிறுவனம் தயாரித்திருந்தது. இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து உயிர்நீத்த, மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கையை மையமாக வைத்து இப்படத்தை எடுத்திருந்தனர்.

முதல் நாளில் இருந்தே இப்படத்திற்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்து வந்த நிலையில், 15 நாட்களில் இப்படம் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
வசூல் சாதனை
அதன்படி, இப்படம் உலகளவில் 15 நாட்களில் ரூ. 275 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை ரூ. 131 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.

கங்குவா படம் வெளிவந்த நிலையிலும், அமரன் படத்தின் வசூல் வேட்டை தொடர்ந்துகொண்டே இருக்கிறது. விரைவில் ரூ. 300 கோடி வசூல் சாதனையை அமரன் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
திரையுலகில் புதிய டிரெண்ட்... புதிய எலக்ட்ரிக் கார் வாங்கிய பிரபுதேவா! விலை எவ்வளவு தெரியுமா? Manithan
என் இந்திய மனைவி, இந்த பாகிஸ்தானி., இவர்கள்தான் என் வாழ்க்கையின் இரண்டு முக்கியமான மனிதர்கள்: வான்ஸ் News Lankasri
பாரிஸில் வீடு ஒன்றில் நடத்தப்பட்ட போதைப் பொருள் சோதனை: கண்டுபிடிக்கப்பட்ட பிக்காசோவின் உண்மையான ஓவியம் News Lankasri