3 நாட்களில் அமரன் படம் செய்த வசூல்.. எவ்வளவு தெரியுமா
அமரன்
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கும் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த 31ஆம் தேதி வெளிவந்து மாபெரும் அளவில் வரவேற்பை பெற்று இருக்கும் திரைப்படம் அமரன்.
இந்திய ராணுவத்தில் சேவை செய்து நாட்டிற்காக உயிர்நீத்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையமாக வைத்து தான் அமரன் படத்தை எடுத்துள்ளனர்.

கமல் ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரித்த இப்படத்தை இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்க சாய் பல்லவி கதாநாயகியாக நடித்திருந்தார். மேலும் இப்படத்திற்கு ஜிவி. பிரகாஷ் குமார் இசையமைத்திருந்தார்.
வசூல்
வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வரவேற்பை பெற்று வரும் அமரன் படம் உலகளவில் கடந்த 3 நாட்களில் செய்த வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, அமரன் படம் 3 நாட்களில் உலகளவில் ரூ. 104 கோடி வசூல் செய்துள்ளது.

இதுவரை சிவகார்த்திகேயன் நடித்த எந்த படமும் 3 நாட்களில் ரூ. 100 கோடியை கடந்தது இல்லை, இதுவே முதல் முறையாகும். மேலும் இது சிவகார்த்திகேயனின் திரை வாழ்க்கையில் மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது.
சிதைக்கப்பட்ட 10,000க்கும் மேற்பட்ட இலக்குகள்: நிலைகுலைந்து நிற்கும் ஈரான்: அமெரிக்கா தகவல் News Lankasri
சூடுபிடிக்கும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்: திமுக-வின் சூப்பர் பிளான்! பிரசாரத்தை தொடங்கும் ஸ்டாலின் IBC Tamilnadu