பாகுபலியை விட அதிக வசூல் செய்த அமரன்.. வசூல் வேட்டையாடும் சிவகார்த்திகேயன்
அமரன்
கடந்த அக்டோபர் 31ஆம் தேதி தீபாவளிக்கு வெளிவந்து, இன்று வரை சரவெடியாக வசூலில் வெடித்து கொண்டு இருக்கிறது அமரன் திரைப்படம்.
சிவகார்த்திகேயனின் கேரியர் பெஸ்ட் திரைப்படமாக அமரன் மாறியுள்ளது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கி இப்படத்தில், சாய் பல்லவி கதாநாயகியாக நடிக்க, கமல் ஹாசனின் ராஜ் கமல் நிறுவனம் இப்படத்தை தயாரித்து இருந்தது.
உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படத்தை தமிழக முதல்வரில் இருந்து சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் வரை அனைவரும் பாராட்டினார்கள்.
பாகுபலியை மிஞ்சிய அமரன்
மக்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு வரும் அமரன் படம் இதுவரை உலகளவில் ரூ. 310 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. மேலும் தமிழ்நாட்டில் ரூ.154 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.
தமிழகத்தில் ரூ. 154 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ள அமரன், பாகுபலி படத்தின் தமிழக வசூலை விட அதிகம் வசூலித்து சாதனை படைத்துள்ளது. இனி வரும் நாட்களில் இன்னும் என்னென்ன வசூல் சாதனைகளை இப்படம் படைக்க போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

புள்ள இறந்ததுக்காக எவனாவது பெருமைப்படுவானா? எந்த பொண்ணுக்கும்.. கண்ணீருடன் பேசிய ரிதன்யாவின் தந்தை News Lankasri

இலங்கை ஜாம்பவானின் இமாலய சாதனையை முறியடித்த சுப்மன் கில்! விமர்சனங்களுக்கு தரமான பதிலடி News Lankasri

விராட் கோலியுடன் தொடர்பு.., ஒரு காலத்தில் பலூன்களை விற்று, ரூ.61,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியவர் யார்? News Lankasri
