தமிழகத்திலும் விஜய்யை வீழ்த்தி நம்பர் 1 ஆன சிவகார்த்திகேயன், அதிர்ச்சி ரிப்போர்ட்
அமரன்
தமிழகத்திலும் விஜய்யை வீழ்த்தி நம்பர் 1 ஆன சிவகார்த்திகேயன், அதிர்ச்சி ரிப்போர்ட்இந்த ஆண்டு மாபெரும் வெற்றியடைந்த தமிழ் திரைப்படங்களில் ஒன்று சிவகார்த்திகேயனின் அமரன்.
இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவான இப்படத்தை கமல் ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்க சாய் பல்லவி கதாநாயகியாக நடித்திருந்தார்.
உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம் உலகளவில் ரூ. 340 கோடிக்கும் மேல் வசூல் செய்து மாபெரும் சாதனையை பாக்ஸ் ஆபிஸில் படைத்தது. அதுமட்டுமின்றி மற்ற திரைப்படங்களின் வசூல் சாதனைகளையும் தொடர்ந்து முறியடித்து வந்தது.
நம்பர் 1 ஆன சிவகார்த்திகேயன்
இந்த நிலையில், தமிழ்நாட்டில் தளபதி விஜய்யின் கோட் திரைப்படத்தின் முக்கிய சாதனையை முறியடித்து, முதலிடத்தை பிடித்துள்ளது சிவகார்த்திகேயனின் அமரன். கோட் திரைப்படத்தை தமிழகத்தில் ஒரு கோடியே மூன்று லட்சம் பேர் திரையரங்கில் பார்த்துள்ளனர்.
ஆனால், அமரன் திரைப்படத்தை ஒரு கோடியே 16 லட்சம் பேர் பார்த்துள்ளனர். இதன் அடிப்படையில் கோட் படத்தை முறியடித்து நம்பர் 1 இடத்தை அமரன் பிடித்துள்ளது.
You May Like This Video