கோட், லியோவை முந்திய அமரன்.. எந்த விஷயத்தில் தெரியுமா, இதோ
அமரன்
கடந்த அக்டோபர் 31ஆம் தேதி தீபாவளிக்கு வெளிவந்து மாபெரும் அளவில் வெற்றியடைந்துள்ள திரைப்படம் அமரன்.
சிவகார்த்திகேயனின் திரை வாழ்க்கையில் இதுவரை எந்த திரைப்படமும் செய்திராத வசூல் சாதனைகளை, இப்படம் செய்து வருகிறது. மேலும் இதற்கு முன் மற்ற முன்னணி நட்சத்திரங்களின் படங்கள் செய்திருந்த வசூல் சாதனைகளையும் முறியடித்துக்கொண்டு இருக்கிறது.
கோட், லியோவை முந்திய அமரன்
மாஸ்டர் படத்தின் முழு வசூலையும் பின்னுதள்ளிய அமரன் படம், தற்போது லியோ மற்றும் கோட் ஆகிய படங்களின் டிக்கெட் விற்பனையை முந்தியுள்ளது. மூன்றாவது வாரத்தில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் அமரன், நேற்று வெள்ளிக்கிழமை 115.05K டிக்கெட்ஸ் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
மூன்றாவது வார வெள்ளி கிழமையில் லியோ 61.4K டிக்கெட்ஸ் மற்றும் கோட் 54.95K டிக்கெட்ஸ் விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது அதனை அமரன் முந்திவிட்டது என தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் இந்த லிஸ்டில் 135.02K டிக்கெட்ஸ் விற்பனை செய்யப்பட்ட ஜெயிலர் முதலிடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவுக்குள் அனுமதி? எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை News Lankasri
