முக்கிய இடத்தில் லியோ வசூலை முறியடிக்கப்போகும் அமரன்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்
அமரன்
அமரன் படம் தீபாவளிக்கு வெளிவந்து வசூலில் பட்டையை கிளப்பி கொண்டு இருக்கிறது. சிவகார்த்திகேயனின் கேரியர் பெஸ்ட் திரைப்படமாக மாறியிருக்கும் அமரன், இதுவரை உலகளவில் ரூ. 294 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.
மேலும் தமிழ்நாட்டில் ரூ. 142 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. பீஸ்ட், வேட்டையன், துணிவு, மாஸ்டர் என முன்னணி நட்சத்திரங்களின் படங்களை கூட வசூல் ரீதியாக அமரன் பின்னுக்கு தள்ளியுள்ள நிலையில், லியோ படத்தையும் முக்கிய இடத்தில் வசூல் ரீதியாக முறியடிக்கவுள்ளது.
வசூலை முறியடிக்கப்போகும் அமரன்
தெலுங்கானாவில் லியோ படம் ரூ. 45 கோடிக்கும் மேல் வசூல் செய்திருந்தது. இந்நிலையில், இதுவரை 18 நாட்களில் தெலுங்கானாவில் மட்டுமே அமரன் படம் ரூ. 41 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.
இந்த வாரத்தின் இறுதிக்குள் லியோ படத்தின் இந்த வசூல் சாதனையை, அமரன் படம் முறியடித்துவிடும் என கூறப்படுகிறது.

நான் டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்தது.. உதயநிதி காய்ச்சலே வந்து படுத்துக்கொண்டார் - இபிஎஸ் IBC Tamilnadu
