வேட்டையனை பின்னுக்கு தள்ளி, கோட் சாதனையை முறியடிக்கப்போகும் அமரன்.. மாஸ் காட்டும் சிவகார்த்திகேயன்
அமரன்
அமரன் படம் தொடர்ந்து பல்வேறு சாதனைகளை படைத்து வரும் நிலையில், இதற்கு முன்னதாக உள்ள மற்ற படங்களின் வசூல் சாதனைகளையும் முறியடித்து வருகிறது.
வேட்டையன், மாஸ்டர், பீஸ்ட், துணிவு என முன்னணி நட்சத்திரங்களின் படங்களின் வசூல் சாதனைகளையும் ஒவ்வொன்றாக தகர்த்து வருகிறது.
சாதனையை முறியடிக்கப்போகும் அமரன்
இந்த நிலையில், புக் மை ஷோ டிக்கெட் புக்கிங் தளத்தில் வேட்டையன் படத்தை பின்னுக்கு தள்ளி, கோட் படத்தின் சாதனையை முறியடிக்கவுள்ளது அமரன் படம்.
வேட்டையன் படத்திற்கு புக் மை ஷோவில் 3M டிக்கெட்கள் புக்கிங் செய்யப்பட்டு இருந்தது. ஆனால், அமரன் படத்திற்கு இதுவரை புக் மை ஷோவில் 4.2M டிக்கெட்ஸ் புக் செய்யப்பட்டுள்ளது.
மேலும் முதலிடத்தில் உள்ள கோட் படத்திற்கு புக் மை ஷோவில் 4.5M டிக்கெட் புக் செய்யப்பட்டிருந்த நிலையில், விரைவில் அந்த சாதனையையும், அமரன் முறியடித்துவிடும் என சொல்லப்படுகிறது.

viral video: நபரொருவரின் சப்பாத்தை பதம் பார்த்த ராஜ பழுப்பு பாம்பு... மெய்சிலிர்கும் காட்சி! Manithan
