அமரன் படத்தின் இறுதி கலெக்ஷன்.. GOAT படத்தை விட அதிகமா?
சிவகார்த்திகேயனின் அமரன் படம் கடந்த அக்டோபர் 31ம் தேதி ரிலீஸ் ஆகி நல்ல விமர்சனங்கள் பெற்றது. சிவகார்த்திகேயன் கெரியரில் புது உச்சமாக 300 கோடிக்கும் மேல் இந்த படம் வசூலித்தது.
ராஜ்குமார் பெரியசாமி இயக்கிய அமரன் படம் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை அடிப்டையாக கொண்டு எடுக்கப்பட்டு இருந்தது. இதில் மேஜர் முகுந்த் மனைவி இந்து ரோலில் நடித்து இருந்த சாய் பல்லவியில் நடிப்புக்கும் அதிகம் பாராட்டுகள் குவிந்தது.
கேரளா இறுதி கலெக்ஷன்
அமரன் படம் கேரளாவில் மட்டும் 13.85 கோடி ரூபாய் வசூலித்து இருப்பதாக இறுதி ரிப்போர்ட் வந்திருக்கிறது.
இது விஜய்யின் GOAT படத்தின் கேரள வசூலை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. கேரளாவில் விஜய்க்கு தான் மிகப்பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது. இருப்பினும் விஜய் படம் செய்த வசூலை சிவகார்த்திகேயன் முறியடித்து புது சாதனை படைத்திருக்கிறார்.