ஒரு வருடத்தை எட்டிய அமரன் மற்றும் லக்கி பாஸ்கர் படங்கள்... வெற்றிப் படங்களின் வசூல் விவரம்
அமரன்
சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த படங்களில் ரசிகர்களால் பெரிய அளவில் கொண்டாடப்பட்ட படம் அமரன்.
ராஜ்குமார் பெரியசாமி இயக்க கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரித்துள்ள இப்படம் கடந்த வருடம் 2024, அக்டோபர் 31 வெளியாகி இருந்தது.

இப்படம் மறைந்த இந்திய ராணுவ வீரர் முகுந்த் வரதராஜன் அவர்களின் வாழ்க்கையை மையமாக கொண்டு உருவாகி இருந்தது.
உண்மை கதையை வைத்து படம் உருவாக ரசிகர்கள் அதிக வரவேற்பு கொடுத்தார்கள்.
லக்கி பாஸ்கர்
அதேபோல் கடந்த வருடம் மலையாளத்தில் இதே நாள் வெளியான படம் தான் லக்கி பாஸ்கர்.
வெங்கி அட்லுரி இயக்க துல்கர் சல்மான், மீனாட்சி சவுத்ரி ஜோடியாக நடித்த இப்படம், சாதாரண நபரான நாயகன் அரசு மற்றும் வங்கி நிர்வாகத்தை ஏமாற்றி பெரும் செல்வந்தனாக மாறும் கதையாக உருவாகி இருந்தது.

இந்த படமும் கடந்த வருடம் செம சூப்பர் டூப்பர் ஹிட். பாக்ஸ் ஆபிஸ் அமரன் மற்றும் லக்கி பாஸ்கர் படங்கள் வெளியாகி இன்றுடன் 1 வருடம் ஆகிவிட்டது.
படங்கள் குறித்தும் ரசிகர்கள் புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியிட்டு வருகின்றனர்.
பாக்ஸ் ஆபிஸ்

சிவகார்த்திகேயனின் அமரன் படம் மொத்தமாக ரூ. 340 கோடியும், துல்கர் சல்மானின் லக்கி பாஸ்கர் ரூ. 120 கோடியையும் வசூலித்திருக்கிறது.
 
                 
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
    