வெற்றிநடைபோடும் சிவகார்த்திகேயனின் அமரன் படத்தின் 4 நாள் வசூல்... மொத்த கலெக்ஷன் எவ்வளவு தெரியுமா?
அமரன் படம்
கடந்த அக்டோபர் 31ம் தேதி தமிழ் சினிமா பெரிதும் எதிர்ப்பார்த்த திரைப்படமான அமரன் படம் வெளியாகி இருந்தது.
கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷ்னல் தயாரிப்பில் சிவகார்த்திகேயன்-சாய் பல்லவி முதன்முறையாக ஜோடி சேர்ந்து நடித்துள்ள இப்படம் மறைந்த ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையில் நடைபெற்ற சம்பவங்களை அடிப்படையாக கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளது.
ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ள இந்த படம் தீபாவளியை முன்னிட்டு வெளியாகி இருந்தது.
பாக்ஸ் ஆபிஸ்
வெளியான நாள் முதல் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. நிஜ கதையை மையமாக கொண்டு வெளியான இப்படம் நல்ல வசூல் வேட்டையும் நடத்தியுள்ளது.
4 நாள் முடிவில் இப்படம் உலகம் முழுவதும் ரூ. 138 கோடி வரை வசூல் வேட்டை நடத்தியுள்ளது.

எடப்பாடி வீட்டுக்கும் செல்வேன்; திமுக கூட்டணியில் கூடுதல் கட்சிகள் இணைய வாய்ப்பு - ஸ்டாலின் IBC Tamilnadu

கெட்டவார்த்தை பேசினால் அவனுக்கு பிடிக்காது; திட்டிய ஆசிரியர் - மாணவன் தற்கொலையால் கதறும் தாய்! IBC Tamilnadu
