தமிழகத்தில் 8 நாட்களில் அமரன் படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா
அமரன்
நடிகர் சிவகார்த்திகேயனின் திரை வாழ்க்கையில் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்துள்ள திரைப்படமாக மாறியுள்ள அமரன். மேஜர் முகுந்த் வரதராஜன் மற்றும் இந்து ரெபேக்கா வர்கீஸ் ஆகியோர் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படத்தை இயக்குனர் ராஜ்குமார் பேசிய சாமி இயக்கியிருந்தார்.

பெரும் எதிர்பார்ப்பில் வெளிவந்த இப்படத்திற்கு மக்கள் மாபெரும் வெற்றியை கொடுத்துள்ளனர். முதல் நாளில் இருந்த அமரன் படத்திற்கு உலகளவில் சிறந்த வரவேற்பு கிடைத்து வருகிறது.
தமிழக வசூல் விவரம்
8 நாட்களில் உலகளவில் இப்படம் ரூ. 189 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இந்த நிலையில், தமிழ் நாட்டில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, அமரன் படம் 8 நாட்களில் தமிழ்நாட்டில் ரூ. 94 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இதுவரை சிவகார்த்திகேயனின் எந்த திரைப்படமும் தமிழ்நாட்டில் இவ்வளவு வசூல் செய்யவில்லை.

மேலும் அமரன் தமிழ்நாட்டில் ரூ. 100 கோடியை கடந்து மாபெரும் வசூல் வேட்டையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக தமிழ்நாட்டில் இருந்து ரூ. 50 கோடிக்கும் மேல் ஷேர் கிடைக்கும் என்றும் திரை வட்டாரத்தில் கூறுகின்றனர்.
325 ஓட்டங்கள் குவித்தும் இறுதிப்போட்டியில் பாகிஸ்தானிடம் தோல்வி: இலங்கை கேப்டன் கூறிய காரணம் News Lankasri
மூன்றல்ல... இரண்டு வாரங்களுக்கான பொருட்களைச் சேமிக்குமாறு பிரித்தானியர்களுக்கு அறிவுறுத்தல் News Lankasri
லொட்டரியில் வென்ற 1 மில்லியன் பவுண்டு - அண்டை வீட்டாரின் கனவை நிறைவேற்றிய பிரித்தானிய பெண் News Lankasri