தமிழகத்தில் 9 நாட்களில் அமரன் படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா
அமரன்
தீபாவளிக்கு வெளிவந்த அமரன் படம் மக்களால் கொண்டாடப்பட்டு மாபெரும் வெற்றியடைந்துள்ளது. சிவகார்த்திகேயன் - ராஜ்குமார் பெரியசாமி கூட்டணியில் உருவான இப்படத்தை கமல் ஹாசன் தயாரித்து இருந்தார்.
மேலும் இப்படத்தில் சாய் பல்லவி கதாநாயகியாக நடிக்க ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருந்தார். இந்திய ராணுவத்தில் சேவை செய்து நாட்டிற்காக உயிர்நீத்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம் வெற்றியடைந்துள்ள நிலையில், உலகளவில் இதுவரை ரூ. 195 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.
தமிழக வசூல்
உலகளவில் வசூல் வேட்டையாடி வரும் அமரன் படம் தமிழகத்திலும் பட்டையை கிளப்பி வருகிறது. இதுவரை சிவகார்த்திகேயன் நடித்த எந்த திரைப்படமும் செய்யாத வசூல் சாதனைகளை அமரன் படம் செய்துள்ளது.
9 நாட்களை பாக்ஸ் ஆபிஸில் கடந்துள்ள அமரன் இதுவரை தமிழ்நாட்டில் மட்டுமே ரூ. 98 கோடி வசூல் செய்துள்ளது. நாளை ரூ. 100 கோடியை கடந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

கிட்னிகள் ஜாக்கிரதை பேட்ஜை அணிந்து வந்த அதிமுக எம்எல்ஏக்கள் - சட்டமன்றத்தில் சலசலப்பு! IBC Tamilnadu

பிரித்தானியாவில் மாணவர்களின் தலைகளை கழிப்பறையில் திணித்து: வெளிச்சத்திற்கு வந்த கொடூரம் News Lankasri
