சர்கார், மெர்சல் வசூலை பின்னுக்கு தள்ளிய அமரன்.. 12 நாட்களில் எவ்வளவு வசூல் தெரியுமா
அமரன்
தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார் சிவகார்த்திகேயன். இவருடைய மிகப்பெரிய வெற்றி திரைப்படமாக அமைந்துள்ளது அமரன்.

சமீபத்தில் தீபாவளிக்கு வெளிவந்த இப்படம் இதுவரை அவருடைய திரை வாழ்க்கையில் எந்த ஒரு படமும் செய்யாத வசூல் சாதனைகளை செய்துகொண்டு இருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கிய இப்படத்தை ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்க சாய் பல்லவி கதாநாயகியாக நடித்திருந்தார்.
வசூல்
முதல் நாளில் இருந்த இப்படத்தின் வசூல் நல்ல வரவேற்பை பெற்று வந்த நிலையில், 3 நாட்களில் ரூ. 100 கோடியை கடந்தது. பின் 10 நாட்களில் ரூ. 210 கோடிக்கும் மேல் வசூல் செய்திருந்தது.

இந்த நிலையில், தற்போது 12 நாட்களில் ரூ. 250 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இதுவரை ரூ. 250 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ள அமரன் படம், பாக்ஸ் ஆபிசில் தளபதி விஜய்யின் சர்கார் மற்றும் மெர்சல் ஆகிய படங்களின் வசூலை பின்னுக்கு தள்ளியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
You May Like This Video
விண்வெளியில் எரிபொருள் நிரப்பு நிலையம் அமைக்கும் தமிழர் - விண்ணுக்கு புறப்பட்ட PSLV C62 News Lankasri
பற்றியெரியும் ஈரான்... போர்க்களமான தெருக்கள்: இந்தியாவிற்கு ஏற்பட்டுள்ள வர்த்தகப் பாதிப்பு News Lankasri