ப்ளாக் பஸ்டர் வெற்றியடைந்த அமரன்.. 29 நாட்களில் செய்த வசூல் எவ்வளவு தெரியுமா
அமரன்
சிவகார்த்திகேயன் - ராஜ்குமார் பெரியசாமி கூட்டணியில் உருவாகி கடந்த அக்டோபர் 31ஆம் தேதி வெளிவந்த திரைப்படம் அமரன். இப்படத்தில் நடிகை சாய் பல்லவி கதாநாயகியாக நடித்திருந்தார்.
இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து உயிர்நீத்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட அமரன், தொடர்ந்து வசூல் சாதனைகளை படைத்தது.
வசூல் சாதனை
சிவகார்த்திகேயனின் திரை வாழ்க்கையில் இதுவரை எந்த திரைப்படமும் செய்யாத வசூல் சாதனைகளை எல்லாம், அமரன் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சிவகார்த்திகேயனின் கேரியரில், ரூ. 300 கோடி பாக்ஸ் ஆபிஸில் இணைந்த முதல் படமாக அமரன் மாறியுள்ளது.
இந்த நிலையில், 29 நாட்களை கடந்துள்ள அமரன் படம் இதுவரை உலகளவில் ரூ. 322 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.

நாசா விண்வெளி வீரரின் உடல்நலம் குறித்து மருத்துவர்கள் கவலை: புதிய புகைப்படத்தால் அதிர்ச்சி News Lankasri
