அமரன் புகழ் ராஜ்குமார் பெரியசாமியின் அடுத்த படம்.. இணையும் முன்னணி நடிகர் யார் தெரியுமா ?
ராஜ்குமார் பெரியசாமி
பிரபல இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் கடந்த அக்டோபர் 31 - ம் தேதி தீபாவளி அன்று பெரும் எதிர்பார்ப்புடன் வெளிவந்த திரைப்படம் அமரன். மேஜர் முகுந்த் வரதராஜன் உண்மை வாழ்க்கை கதையை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது.
இதில், முகுந்த் கதாபாத்திரத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் முகுந்த் மனைவி இந்து ரெபெக்கா வர்கீஸ் கதாபாத்திரத்தில் நடிகை சாய் பல்லவி ஆகியோர் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி நடித்துள்ளனர்.

தற்போது, இந்த படத்திற்கு 150 கோடிக்கும் மேல் வசூலுடன் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து கொண்டு வருகிறது. அதை தொடர்ந்து, பல சினிமா நட்சத்திரங்கள் இந்த படத்தை பாராட்டியும் வாழ்த்து தெரிவித்தும் வருகின்றனர்.
இணையும் நடிகர்
இந்நிலையில், தற்போது அமரன் போன்ற ஒரு சிறந்த படத்தை கொடுத்த இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்க போகும் அடுத்த படம் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது.
அதன்படி, அடுத்து ராஜ்குமார் பெரியசாமி நடிகர் தனுஷ் வைத்து ஒரு படத்தை இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போது, தனுஷ் ராயன் படத்தை முடித்து விட்டு 'இட்லி கடை' என்ற படத்தை இயக்கி நடித்து வருகிறார்.

இதற்கிடையில் குபேரா, நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் ஆகிய படங்களை முடித்துள்ளார். மேலும் இவர் கைவசம் இளையராஜா, Tere Ishk Mein ஆகிய படங்களும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
திசைதிருப்பு முன்னேற்றக் கழகத்தின் 𝐒𝐈𝐑 எதிர்ப்புக் கூட்டம் - நயினார் நாகேந்திரன் விமர்சனம் IBC Tamilnadu