அமரன் படம் வேண்டாம் என்றேன்.. முகுந்தனின் அம்மா வேதனை, ஏன் தெரியுமா?
அமரன்
சிவகார்த்திகேயன் - சாய் பல்லவி முதல் முறையாக இணைந்து நடித்து கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் அமரன். கமல் ஹாசன் தயாரிப்பில் உருவான இப்படத்தை இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்க, ஜி.வி. பிரகாஷ் இசையமைத்திருந்தார்.
மறைந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்றது.
கடந்த ஆண்டு திரைக்கு வந்த சூப்பர் ஹிட் படங்களில் அமரன் திரைப்படமும் ஒன்று. இப்படத்தை ரசிகர்கள் மட்டுமின்றி சினிமா நட்சத்திரங்களும் பாராட்டி இருந்தனர்.
ஏன் தெரியுமா
இந்நிலையில், அமரன் திரைப்படத்தை எடுக்க வேண்டாம் என்று கூறியதாக முகுந்த் வரதராஜனின் அம்மா தெரிவித்துள்ளார்.
கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட முகுந்த் வரதராஜனின் அம்மா அங்கு பேசிய சில விஷயங்கள் தற்போது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
அதில், " அமரன் படத்தை எடுக்க வேண்டாம் என்று நான் முதலில் சொன்னேன். அதற்கு முக்கிய காரணம் என் மகனின் நினைவு வந்து கொண்டே இருக்கும், அது எனக்கு மிகுந்த கஷ்டத்தை ஏற்படுத்தும் என்பதால் தான் வேண்டாம் என்றேன்.
ஆனால், இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி என்னை இறுதியில் சம்மதிக்க வைத்து விட்டார்" என்று கூறியுள்ளார்.
You May Like This Video

மூன்றாம் உலகப்போர் வெடித்தால்... பிரான்சுடன் அணு ஆயுத ஒப்பந்தம் செய்துகொள்ளும் பிரித்தானியா News Lankasri

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri
