தமிழ்நாட்டில் அமரன் 3 நாட்களில் செய்த வசூல்.. மிகப்பெரிய சாதனை படைக்கும் சிவகார்த்திகேயன்..
அமரன்
சிவகார்த்திகேயனின் கெரியர் பெஸ்ட் திரைப்படமாக மாறியுள்ளது அமரன். உண்மை சம்பவங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படத்தை பிரபல இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கியிருந்தார்.

மேலும் இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து முதல் முறையாக சாய் பல்லவி நடித்துள்ளார். சிவகார்த்திகேயனின் திரை வாழ்க்கையில் எப்படி அமரன் முக்கிய திரைப்படமோ, அதே போல் சாய் பல்லவியின் திரை வாழ்க்கையிலும் அமரன் சிறந்த படமாக மாறியுள்ளது.

குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் அமரன் படம் இந்த அளவிற்கு மக்கள் மத்தியில் பேசப்பட ஹீரோ சிவகார்த்திகேயன் ஒரு காரணம் என்றாலும், சாய் பல்லவியும் மிகமுக்கியமாக அமைந்துள்ளார். அவருடைய நடிப்பே இதற்கான காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக வசூல் விவரம்
உலகளவில் ரூ. 100 கோடியை கடந்து சாதனை படைத்துள்ள நிலையில், தற்போது தமிழ்நாட்டிலும் 3 நாட்களில் ரூ. 50 கோடியை கடந்து சாதனை படைத்துள்ளது அமரன் படம். இதுவரை சிவகார்த்திகேயன் திரை வாழ்க்கையில் எந்த ஒரு படமும் 3 நாட்களில் தமிழ்நாட்டில் ரூ. 50 கோடி வசூல் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 
                 
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
    