ப்ளாக் பஸ்டர் வெற்றியடைந்த அமரன் திரைப்படம்.. OTT ரிலீஸ் எப்போது தெரியுமா ?
அமரன்
அமரன் படம் 2024ஆம் ஆண்டின் சிறந்த திரைப்படங்களில் ஒன்றாகியுள்ளது. சிவகார்த்திகேயனின் திரை வாழ்க்கையில் அதிகம் வசூல் செய்த படமாகவும் அமரன் வலம் வருகிறது.
இந்திய ராணுவ அதிகாரி முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வசூலில் சாதனை படைத்துள்ளது.
முதல் நாளில் இருந்தே நல்ல வசூல் வேட்டை செய்யும் இப்படம் பல முன்னணி நடிகர்களின் பட சாதனைகளை முறியடித்து வருகிறது.
இவ்வாறு வசூலில் மாஸ் காட்டி வரும் அமரன் திரைப்படம் எப்போது OTT தளத்தில் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்து கொண்டிருந்த நிலையில், எப்போது OTT- ல் வெளியாகும் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
எப்போது தெரியுமா
இந்நிலையில், அக்டோபர் மாதம் தீபாவளி ஸ்பெஷலாக வெளியான அமரன் திரைப்படம் தற்போது நெட்பிளிக்ஸ் OTT தளத்தில் வரும் 5 - ம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளிவர உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவுக்குள் அனுமதி? எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை News Lankasri

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan
