தமிழ்நாட்டில் 2 நாட்களில் அமரன் செய்த வசூல்.. எவ்வளவு தெரியுமா
அமரன்
தீபாவளிக்கு பண்டிகைக்கு சினிமா ரசிகர்களுக்கு விருந்தாக வெளிவந்த திரைப்படம் அமரன். உலகநாயகன் கமல் ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிப்பில் முதல் முறையாக சிவகார்த்திகேயன் நடித்திருந்தார்.
மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படத்தை இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்க, கதாநாயகியாக சாய் பல்லவி நடித்திருந்தார். பெரிதும் எதிர்பார்ப்பில் உருவான இப்படம் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது.
தமிழக வசூல் விவரம்
ஆம், முதல் நாளே தமிழ்நாட்டில் ரூ. 16.5 கோடி வரை வசூல் செய்திருந்த நிலையில் இரண்டு நாட்கள் முடிவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, அமரன் படம் இரண்டு நாட்களில் தமிழ்நாட்டில் ரூ. 31 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. தமிழகத்தில் இதுவரை சிவகார்த்திகேயன் நடித்த எந்த திரைப்படத்திற்கும் கிடைத்திராத வரவேற்பு இப்படத்திற்கு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தோண்ட தோண்ட தங்கம்; பல ஆண்டுகளுக்குப் பிரச்சினை இல்லை - மிக பெரிய சுரங்கம் கண்டுபிடிப்பு IBC Tamilnadu

அஜித் குமார் மரண வழக்கில் கைதான 5 காவலர்களையும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு News Lankasri
