அமரன் படத்தின் இறுதி வசூல்.. சிவகார்த்திகேயனின் கேரியர் பெஸ்ட் கலெக்ஷன்
அமரன்
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த அமரன் மாபெரும் அளவில் வெற்றியடைந்தது.
இதுவரை சிவர்கார்த்திகேயன் நடிப்பில் வெளியான எந்த படமும் செய்யமுடியாத வசூல் சாதனைகளை, அமரன் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவான இப்படத்தில் கமல் ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரித்து இருந்தது. மேலும் இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து சாய் பல்லவி நடித்திருந்தார்.
இறுதி வசூல்
முதல் நாளில் இருந்து வசூலில் வேட்டையாடி வரும் அமரன் படத்தின் இறுதி வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. சிவகார்த்திகேயனின் கேரியர் பெஸ்ட் திரைப்படமாக மாறியுள்ள அமரன் படம் உலகளவில் ரூ. 339 கோடி வசூல் செய்துள்ளது.
இதன்மூலம் 2024ஆம் ஆண்டில் வெளிவந்த தமிழ் திரைப்படங்களில், அதிகம் வசூல் செய்த படங்களின் லிஸ்டில், இரண்டாம் இடத்தை அமரன் பிடித்துள்ளது.