எத்தனை உயிர்களை காவு வாங்கி ஆட்சியில் அமர்வீர்கள்.. தவெக விஜய்க்கு இயக்குநர் அமீர் கேள்வி! கண்டனம் தெரிவிக்கும் பிரபலங்கள்
கரூர் சோகம்
நேற்று கரூரில் நடைபெற்ற தவெக கட்சியின் பிரச்சாரத்தின் போது, கூட்ட நெரிசலில் சிக்கிய 39 பேர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், துயரத்தையும் கொடுத்துள்ளது.
விஜய்யிடம் இதுகுறித்து விமான நிலையத்தில் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியும் அவர் எந்த ஒரு பதிலும் கூறாமல் சென்றுவிட்டார். கரூரில் இருந்து சென்னை வந்த விஜய்க்கு அவரது வீட்டில் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. 15க்கும் மேற்பட்ட போலீஸ் விஜய் வீட்டில் பாதுகாப்புக்கு இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து அரசியல் தலைவர்களும், சினிமா பிரபலங்களும் தங்களது இரங்கலையும், கண்டனங்களையும் தெரிவித்து வருகிறார்கள். இதில் நடிகை ஓவியா நடிகர் விஜய்யை கைது செய்யவேண்டும் என இன்ஸ்டா பக்கத்தில் பதிவு செய்திருந்தார். நடிகர் விஷால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தவெக இழப்பீடு தரவேண்டும் என தெரிவித்திருந்தார்.
கண்டனம் தெரிவிக்கும் பிரபலங்கள்
இந்நிலையில், இயக்குநரும் நடிகருமான அமீர் தனது கருத்தை ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார். இதில், "கரூரில் இறந்தவர்களின் ஆன்மா அமைதி பெற இறைவனை பிராத்திரிகிறேன். என்று தணியும் இந்த சினிமா மோகம்? உங்கள் அரசியல் விளையாட்டுக்கு அப்பாவி குழந்தைகள் பலியா?" என கேட்டுள்ளார்.
மேலும் நடிகரும் அரசியல்வாதியுமான சரத்குமார், கரூரில் நடந்த உயிரிழப்புக்கு விஜய்தான் முழு பொறுப்பு ஏற்கவேண்டும் என கூறியுள்ளார்.