பிக் பாஸ் சீசன் 5 பைனலிஸ்ட் அமீரின் அன்ஸீன் வீடியோ, அவர் வீட்டில் எப்படி உள்ளார் பாருங்க..
பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய நிகழ்ச்சி தான் பிக் பாஸ், இந்த நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது.
இறுதிபோட்டியை நெருங்கி வரும் பிக் பாஸ் சீசன் 5-ல் கடந்த வாரம் சஞ்சீவ் வெங்கட் வெளியேற்றப்பட்டார்.
இதனிடையே மீதம் உள்ள போட்டியாளர்களின் யார் அடுத்த வாரம் வெளியேற்றப்படுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு சிபி வெளியேறியுள்ளார்.
இந்நிலையில் வைல்ட் கார்டு என்ட்ரியாக பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்து தற்போது பைனல்ஸ் வரை சென்றுள்ள முக்கிய போட்டியாளர் அமீர்.
தற்போது ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ள அமீரின் அன்ஸீன் வீடியோக்கள் சில சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
அதன்படி அமீர் அலெனாவுடன் இருக்கும் கியூட்டான வீடியோக்கள் வெளியாகி ரசிகர்களிடையே பரவி வருகிறது. இதோ அந்த அன்ஸீன் வீடியோவை நீங்களே பாருங்கள்..