செக் மோசடி வழக்கில் சிக்கிய விஜய் பட நடிகை! நீதிமன்றம் அபராதம்
விஜய் நடிப்பில் 2003ல் வெளிவந்த புதிய கீதை படத்தில் நடித்து இருந்தவர் அமீஷா படேல். அவர் தற்போது ஹிந்தி சினிமாவில் கவனம் வருகிறார்.
இந்நிலையில் தற்போது அமீஷா மீது செக் மோசடி வழக்கு தொடரப்பட்டு இருக்கிறது. அதில் நீதிமன்றம் அவருக்கு அபராதம் விதித்து இருக்கும் செய்தி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

மோசடி
தேசி மாஜிக் என்ற படத்தில் நடிப்பதற்காக அமீஷா படேல் ஒப்பந்தம் ஆகி இருக்கிறார். அதற்காக 2.5 கோடி ருபாய் சம்பளம் அவருக்கு தரப்பட்டு இருக்கிறது. ஆனால் பணத்தை வாங்கிக்கொண்டு ஷூட்டிங் செல்லாமல் ஏமாற்றிவிட்டார் என தயாரிப்பாளர் புகார் கூறி இருக்கிறார்.
பணத்தை திரும்ப தரும்படி கேட்டதற்கு ஒரு செக் கொடுத்திருக்கிறார் நடிகை அமீஷா படேல். ஆனால் வங்கி கணக்கில் பணம் இல்லை என செக் திரும்ப வந்திருக்கிறது. அதனால் அமீஷா மீது செக் மோசடி வழக்கு தொடர்ந்திருக்கிறார் அவர்.
வழக்கு விசாரணை ராஞ்சி நீதிமன்றத்தில் நடந்தபோது சாட்சியை விசாரிக்க அமீஷா படேல் தரப்பு வழக்கறிஞர் வரவில்லை. இதனால் அவருக்கு 500 ருபாய் அபராதம் விதித்து இருக்கிறது நீதிமன்றம்.

4 டிகிரி ஐஸ் நீரில் குளித்த சமந்தா! வீடியோ பார்த்து அதிர்ந்த ரசிகர்கள்
ஐரோப்பாவின் ஐந்து பெரிய பாதுகாப்பு சக்திகள்... கூட்டாக வான் பாதுகாப்பு அமைப்பை உருவாக்க திட்டம் News Lankasri
உலக நாடுகள் மீது டிரம்ப் விதித்த வரி விதிப்பு ரத்து: அமெரிக்க உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு News Lankasri
Khiladi Jodies: இலங்கை வீதியில் கருவாடு விற்ற இந்திய பிரபலங்கள்... சாப்பாடு இல்லாமல் அடைக்கப்பட்ட கொடுமை Manithan