அமீர் - பாவனி ஜோடிக்கு இன்னொரு ஜாக்பாட்! அவர்களே மேடையில் சொன்ன அறிவிப்பு
பிக் பாஸ் ஜோடிகள் டைட்டில் மட்டுமின்றி அமீர் பாவனி ஜோடிக்கு இன்னொரு சூப்பரான விஷயம் கிடைத்திருக்கிறது.
அமீர் - பாவனி
விஜய் டிவியில் தற்போது காதல் புறாக்களாக வலம் வருவது அமீர் பாவனி ஜோடி தான். பிக் பாஸ் வீட்டில் இருக்கும்போதே அமீர் பாவனியிடம் காதலை சொல்ல தொடங்கிவிட்டார். ஆனால் பாவனி அதை ஏற்றுக்கொள்ளவில்லை.
அதன் பின் அவர்கள் இருவரும் BB ஜோடிகள் ஷோவில் ஒன்றாக இணைந்து நடனமாக வாய்ப்பு வந்ததும் முதலில் பாவனி வேண்டவே வேண்டாம் என்றாராம். ஆனால் விஜய் டிவி தான் கட்டாயப்படுத்தி அவர்களை ஜோடி சேர்ந்து ஆட வைத்திருக்கிறது. அந்த விஷயத்தை பாவனியே பைனலில் கூறி இருக்கிறார்.
மீண்டும் ஜோடி
அமீர் - பாவனி ஜோடி இன்று ஒளிபரப்பான BB ஜோடிகள் ஷோவின் பைனலில் டைட்டில் ஜெயித்தது. அதன் பின் அவர்கள் ஒரு மகிழ்ச்சியான செய்தியை அறிவித்தனர்.
பாவனி மற்றும் அமீர் இருவரும் சேர்ந்து ஜோடியாக ஒரு படத்தில் கமிட் ஆகி இருக்கிறார்களாம். அந்த விஷயத்தை தான் மகிழ்ச்சியாக அறிவித்தனர். அவர்களுக்கு தற்போது வாழ்த்து குவிந்து வருகிறது.
சம்பளத்தை உயர்த்திய தனுஷ்! இத்தனை கோடி கேட்கிறாரா