விஜய் எனக்கு சகோதரர் மாதிரி, அஜித் - ? - முன்னணி நடிகர்கள் குறித்த பாலிவுட் நடிகர் அமீர் கான்
அமீர் கான்
பாலிவுட் திரையுலகின் சூப்பர் ஸ்டார் நடிகர் அமீர் கான் இவரின் தங்கல் திரைப்படம் தான் உலகளவில் அதிக வசூலை குவித்த இந்திய திரைப்படமாக திகழ்ந்து வருகிறது.
மேலும் இவர் நடிப்பில் அடுத்து வெளியாகவுள்ள திரைப்படம் லால் சிங் சத்தா, பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் ஹாலிவுட்டின் Forrest Gump படத்தின் இந்திய வெர்ஷனாகும்.
இதற்கிடையே விரைவில் வெளியாகவுள்ள இப்படத்தின் ப்ரோமோஷனுக்காக சென்னை வந்திருந்தார் அமீர் கான். அப்போது அவர் அளித்த பேட்டி ஒன்றில் முன்னணி நடிகர்களான விஜய் மற்றும் அஜித் குறித்து பேசியிருக்கிறார்.
விஜய் - அஜித்
விஜய் குறித்து அமீர் கான் - “விஜய் சார் ஒரு அற்புதமான நடிகர், அவரை பார்க்கையில் எனது சகோதரர் போல தோன்றுகிறது. குடும்பத்தை சேர்ந்தவர் போல இருக்கும், ரஜினி சாரை பார்த்தாலும் அப்படி தான் இருக்கும்”
அஜித் குறித்து அமீர் கான் - “அஜித் சாரிடம் நிறையே உள் சக்தி இருக்கிறேது, அவர் எப்போதும் இதையாவது பெரிய விஷயத்தை செய்ய வேண்டும் என நினைப்பார்”என பேசியுள்ளார்.
11 நாள் முடிவில் தி லெஜண்ட் படத்தின் முழு வசூல் விவரம்