பவானிக்கு முத்தம் கொடுத்த அமீர்.. மீண்டும் மருத்துவ முத்தமா..!
பிக் பாஸ் 5 வீட்டிற்குள் மிகப்பெரிய சர்ச்சைக்குரிய விஷயமாக பவானி, அபிநய் காதல் விஷயம் இருந்தது.
அதனை முற்றிலுமாக அபிநய் மறுத்தார். ஆனால், பவானி தனக்கும் அபிநய்யின் செயல் அப்படி தான் தோன்றுகிறது என்று கூறினார். இதனை கமல் ஹாசன் கடந்த வாரம் முடித்து வைத்தார்.
இதன்பின் இந்த வாரம் பவானியுடன், அமீர் நெருக்கமாக இருந்தார். மேலும், பவானியை காதலிக்கிறேன் என்று கூறினார். இது நிகழ்ச்சியை பார்ப்போர் பலரையும் அதிர்ச்சியாக்கியது.
இந்நிலையில் இன்று ஒளிபரப்பான எபிசோடில், இரவு நேரத்தில் பவானி மற்றும் அமீர் இருவரும் பேசிக்கொண்டிருந்தார்கள். அப்போது, அமீர் தீடீரென பவானிக்கு முத்தம் கொடுத்துவிட்டார்.
இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் ஷாக் ஆகியுள்ளனர். சிலர், மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் மருத்துவ முத்தமா..! என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.
அந்த காட்சியின் புகைப்படம் இதோ..