மீண்டும் இணையும் பாவனி - அமீர் ஜோடி.. பிரம்மாண்டமாக துவங்கிய புதிய நிகழ்ச்சி
பாவனி மற்றும் அமீர்
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் சந்தித்துக்கொண்டவர்கள் பாவனி மற்றும் அமீர். இதில் நடிகை பாவனியை, தான் காதலிப்பதாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் அமீர் கூறினார். இந்த விஷயம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கிசுகிசுக்கப்பட்டது.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் அமீர் - பாவனி இருவரும் சில நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டதை சமீபத்தில் பார்த்திருந்தோம். இந்நிலையில், தற்போது மீண்டும் விஜய் டிவி நிகழ்ச்சியில் ஜோடிகளாக அமீர் - பாவனி இருவரும் களமிறங்குகிறார்கள்.
பிபி ஜோடிகள்
ஆம், விஜய் டிவியின் சூப்பர்ஹிட் நிகழ்ச்சிகளில் ஒன்றான பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் அமீர் - பாவனி ஜோடியாக நடனம் ஆட வந்துள்ளார்கள்.
அவர்கள் மட்டுமின்றி ஆரத்தி - அவரது கணவர் கணேஷ், இசைவாணி வேல்முருகன், ஜக்கி - அவரது காதலர் தேவ், அபிஷேக் - சுருதி, சுஜா வருநீ அவரது கணவர் சிவா குமார், தாமரை - அவரது கணவர் பார்த்தசாரதி என பலரும் இதில் போட்டியாளர்களாக பங்கேற்கவுள்ளார்கள். மேலும், இந்த நிகழ்ச்சியை ராஜு மற்றும் பிரியங்கா இணைந்து தொகுத்து வழங்கப்போவதாக தெரிகிறது.
இதோ அந்த ப்ரோமோ வீடியோ..