முதல் கணவர் இறந்தபின் அமீர் உடன் காதல்.. தவறாக பேசுபவர்களுக்கு பாவனி பதிலடி
பிக் பாஸ் ஷோவில் போட்டியாளராக கலந்துகொண்ட சீரியல் நடிகை பாவனி ரெட்டி அவரது முதல் கணவர் கண் எதிரிலேயே தற்கொலை செய்து கொண்டது பற்றி உருக்கமாக பேசி இருந்தார். மேலும் அதே ஷோவில் போட்டியாளராக வந்த அமீர் பாவனியை காதலிப்பதாக கூறினார்.
ஷோ முடிந்து வெளியில் வந்த பிறகு தான் பாவனி அமீர் காதலை ஏற்றுக்கொண்டார். தற்போது அவர்கள் ஜோடியாக படங்களிலும் நடிக்க தொடங்கி இருக்கிறார்கள். மேலும் அவர்கள் ஜோடியாக வெளிநாட்டுக்கு ட்ரிப் சென்று இருக்கும் புகைப்படங்கள் வைரல் ஆகி வருகிறது.

ட்ரோல்களுக்கு பாவனி பதிலடி
இந்நிலையில் தங்களை பற்றி வரும் ட்ரோல்களுக்கு பாவனி பதிலடி கொடுக்கும் வகையில் ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.
"ஏற்கனவே திருமணம் ஆன பெண்ணை ஒரு ஆண் திருமணம் செய்தால், அதை பற்றி எல்லோரும் பேசுகிறார்கள். ஆனால் விவாகரத்தான ஒரு ஆண் ஒரு பெண்ணை மறுமணம் செய்தால் பாதி பேருக்கு அவரது டைவர்ஸ் பற்றி தெரிவது கூட இல்லை" என அந்த வீடியோவில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
Weather Update: தமிழ்நாட்டில் அடுத்த 6 நாட்கள் மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் அறிவிப்பு IBC Tamilnadu
ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய எல்லை முறையைக் கைவிடுக... விமான நிலைய நிர்வாகிகள் கோரிக்கை News Lankasri