பிக் பாஸ் அமீர் - பாவனி திருமண தேதி.. மகிழ்ச்சியுடன் கூறிய ஜோடி
அமீர் - பாவனி
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் சந்தித்து கொண்டவர்கள் அமீர் மற்றும் பாவனி. நிகழ்ச்சி நடந்துகொண்டிருந்த போதே இருவருக்கும் இடையே காதல் என கிசுகிசுக்கப்பட்டது.
பின் நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்தபின், இருவரும் காதலிப்பதாக அறிவித்தனர். இதன்பின் எப்போது திருமணம் என அமீர், பாவனி இருவரிடமும் தொடர்ந்து கேள்விகள் கேட்கப்பட்டு வருகிறது.
ஆனால், இதுவரை எந்த ஒரு தகவலையும் தங்களது திருமணம் குறித்து இருவருமே தெரிவிக்கவில்லை. சமீபத்தில் பேட்டி ஒன்றில் அமீர் - பாவனி கோடியாக கலந்துகொண்டனர். அப்போது தங்களது திருமண தேதியை கூறினார்கள்.
திருமண தேதி
இந்த ஆண்டு நவம்பர் மாதம் திருமணம் நடக்கும் என அமீர் - பாவனி கோடி கூறியுள்ளனர். இவர்களுடைய திருமணத்தை எதிர்பார்த்து காத்து கொண்டிருந்த ரசிகர்களுக்கு இது மகிழ்ச்சியான செய்தியாக அமைந்துள்ளது. பலரும் தங்களது வாழ்த்துக்களையும் இந்த காதல் ஜோடிக்கு தெரிவித்து வருகிறார்கள்.

குஞ்சுகளை வாய் வழியாக பெற்றெடுக்கும் உயிரினம் எது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu
